Press "Enter" to skip to content

ஸாஹிரா பாதைக்கான போக்குவரத்து சமிக்ஞைகள் xZahirians இனால் கையளிப்பு

xZahirians ஏற்பாடு செய்த பாதை போக்குவரத்து சமிக்ஞைகள் கையளிக்கும் வைபவம் இன்று ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

ஸாஹிராக் கல்லூரியின் பாடசாலை நேரங்களில் போக்குவரத்து கண்காணிப்பு தொடர்பாக  சாலை போக்குவரத்து சமிக்ஞைகள் இல்லாமை பல வருடங்களாக இருந்து வந்த ஒரு குறைபாடு ஆகும்.

இந்த பாதை போக்குவரத்து சமிக்ஞை பதாதைகளுக்காக ஸாஹிராவின் ரியாத் பழைய மாணவர்கள் ஆதரவு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்விற்கு பாடசாலை அதிபர் திரு. ஜிப்ரி, பிரதி அதிபர்களான திரு. ஸியாத், திரு. அயூப் ஆகியோருடன் பிரதம அதிதியாக மாவனல்லை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. அசேல ஹேரத் கலந்து சிறப்பித்தார்.

பாடசாலை மாணவர்களின் மனித வள விருத்தி, பழைய மாணவர் விருத்தி, சமூக மறுமலர்ச்சிக்கான பங்களிப்பு மற்றும் பாடசாலை பௌதீக வள மேம்பாடு போன்ற பல்வேறுபட்ட  நொக்கங்ளுடன் xZahirians அமைப்பு இயக்குவதுடன், குறித்த திட்டம் தொடர்பாக றியாத் பழைய மாணவர்களுக்கும் தனது நன்றிகளை நிகழ்வில்  உறையாற்றிய xZahirians அமைப்பின் தலைவர் திரு. ரிலாப் தெறிவித்தார்.

அதிபர் தனது உரையில் xZahirians அமைப்பின் பங்களிப்பை பாராட்டியதோடு தனது நன்றிகளை தெரிவித்தார்.

போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. அசேல ஹேரத் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான செயற்பாடானது சமூகப் பொறுப்புள்ள மெச்சத்தக்க செயல் எனக் குறிப்பிட்டார்.

ஸாஹிராக் கல்லூரியின் போக்குவரத்து மேலாண்மை குழு (OMT) உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து 9 மணியளவில் சிறு சிற்றுண்டி பரிமாறலுடன் இனிதே முடிவுற்றது.

Be First to Comment

Leave a Reply